சூரா 34க்குரிய அடிக்குறிப்புகள்

*34:21 நாம் மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா அல்லது இல்லையா என்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவுகோல்கள் 6:113, 17:45 & 39:45ல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அளவுகோல்களும் நம்முடைய வாய்மொழியான அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், நமது உண்மையான திட நம்பிக்கைகளை வெளிக்கொண்டு வருகின்றன.

*34:28 பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தத் தூதரின் பெயர் “ரஷாத்கலீஃபா” என குர்ஆனிற்குள் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. “ரஷாத்” என்ற பெயரின் எழுத்தெண்மதிப்புடன்(505), “கலீஃபா” என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (34), வசன எண்ணையும் (28) நாம் கூட்டினால், ரஷாத் கலீஃபாவால் திரைவிலக்கப்பட்ட 19ன் அடிப்படையிலான குர்ஆனின் கணித அற்புதத்திற்கு ஒத்திருக்கும் ஒரு கூட்டுத் தொகையை நாம் கிடைக்கப் பெறுகின்றோம். (505+725+34+28=1292=19 X 68). 5:19லும் மேலும் அதற்குரிய அடிக்குறிப்பிலும் அதிகத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

*34:43 “ரஷாத்”தின் எழுத்தெண் மதிப்புடன் (505), “கலீஃபா” என்பதன் மதிப்பையும் (725), இந்த வசன எண்ணையும் (43), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 505+725+43=1273=19 X 67. பின் இணைப்பு 1 & 2 ஐப் பார்க்கவும்.

*34:45 மோஸஸிற்கும், இயேசுவிற்கும் கொடுக்கப்பட்ட மாபெரும் அற்புதங்கள் காலம் மற்றும் இடம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டிருந்தன; அந்த இடத்தில் அந்தக் காலக்கட்டத்தில் இருக்க நேர்ந்த சில மனிதர்களால் அவை பார்க்கப்பட்டன. ஆனால் குர்ஆனுடைய கணித அற்புதமோ நிலைத்திருப்பதாகும். (74:30-35 மற்றும் பின் இணைப்பு 1 ஐ பார்க்கவும்).

*34:46 “ரஷாத்”தின் எழுத்தெண்மதிப்பிற்கு (505) அருகில் “கலீஃபா” என்பதன் மதிப்பையும் (725), பின்னர் சூரா எண்ணையும் (34), மேலும் வசன எண்ணையும் (46) நாம் அமைத்தால் நமக்குக் கிடைப்பது 5057253446=19 X 266171234.

*34:53 அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் கடவுளின் வார்த்தையை கைவிட்டு விட்டு மனிதர்களின் வார்த்தைகளை ஆதரிக்க முற்படுகின்றனர். யூதர்களும் முஸ்லிம்களும் மிஷ்னாஹ் (ஹதீஸ்) மற்றும் ஜெமரா (சுன்னா) வை ஆதரிக்கின்றனர், அதே சமயம் கிறிஸ்தவர்களோ, இயேசுவிற்குப் பின்னர் 325 வருடங்கள் கழித்து நைசீன் மாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட திரித்துவத்தை ஆதரிக்கின்றனர்.