சூரா 24க்குரிய அடிக்குறிப்புகள்

* 24:2 சமூக நெருக்கடி, அதாவது தண்டனையைப் பொதுமக்கள் பார்ப்பதுதான், அடிப்படையான தண்டனை (மேலும் 5:38ஐப் பார்க்கவும்) . சவுக்கடி அடையாளபூர்வமானதாகவே இருக்க வேண்டும், கடுமையானதாக அல்ல.

*24:11வேதம் வழங்கப்பட்டவரின் மனைவி ஆயிஷா தவறுதலாகப் பாலைவனத்தில் விட்டுச் செல்லப்பட்டு, பின்னர், ஓர் இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டு வேதம் வழங்கப்பட்டவரின் பிரயாணக் கூட்டத்தைப் பிடிக்க அவரால் உதவி செய்யப்பட்ட ஒரு சரித்திரச் சம்பவத்தை இது குறிக்கின்றது. இது ஆயிஷாவிற்கெதிரான பிரசித்தி பெற்ற ‘பெரும்பொய்’ யைத் துவக்கியது.

*24:30-31 ஆகையால் , ஒழுக்கமாக ஆடையணிதல், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஒரு பண்பாகும். ஒரு பெண்ணின் ஆடைக்கான குறைந்தபட்சத் தேவையானது அவளுடைய ஆடையை நீளப்படுத்திக் கொள்வதும் (33:59) மேலும் அவளது மார்பை மறைத்துக்கொள்வதுமாகும். கொடுங்கோன்மையான அரேபியப் பாரம்பர்யங்கள், ஒரு பெண் உச்சி முதல் பாதம் வரை மூடப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு பொய்யான கருத்தைத் தந்துள்ளன; இத்தகையது குர்ஆனுடைய அல்லது இஸ்லாத்தினுடைய ஆடை அல்ல.

*24:62 இவ்வசனம் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றது; “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505) “கலீஃபா” என்பதன் எழுத்தெண்மதிப்பையும் (725) , வசன எண்ணையும் (62), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 1292, ஒரு 19ன் பெருக்குத் தொகையாகும் (1292=19 X 68) . பின் இணைப்பு 2 ஐ பார்க்கவும்.